மிளகாய் பொடியை தூவி போலீசார் கண்முன்னே ரவுடியை சுட்டு தள்ளிய கும்பல் - பகீர் காட்சிகள்

x

ராஜஸ்தானில் பரர்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கேங்ஸ்டர் குல்தீப் என்பவரை, அரசுப்பேருந்தில் பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அமோலி என்ற சுங்கச்சாவடியில் பேருந்து வழியில் நின்றது. அப்போது, திடீரென பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள், திரைப்பட பாணியில் போலீசாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, கேங்ஸ்டர் குல்தீபை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளி விஜய்பால் காயமடைந்தார். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், காரை பறிமுதல் செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பேருந்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்பை கருதியே குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பயணிகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்