நாகூர் தர்காவில் கந்தூரி விழா - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மினாராக்கள்

x

உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு, மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகின்றன.

நாகூர் தர்காவில், 466-ஆம் ஆண்டு கந்தூரி விழா தொடங்கியதை அடுத்து, தர்காவில் உள்ள 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம் ஆகியவை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. இதனால், நாகூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தர்காவில் நாளை கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 2-ஆம் தேதி நாகையில் இருந்து சந்தனக் கூடு ஊர்வலமும், 3-ஆம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்