பணம் பந்தயம் வைத்து சூதாட்டம்..அதிரடியாக வீட்டில் நுழைந்த போலீஸ்..

x

சென்னை சைதாப்பேட்டையில் பணம் வைத்து பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் கண்காணித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள ஒரு வீட்டில் சிலர் பணம் கட்டி பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பணம் வைத்து பந்தயத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரொக்கப் பணம் 39 ஆயிரத்து 150 ரூபாயும், ஒரு சீட்டுக்கட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்