ஜி 20 உச்சி மாநாட்டில் தலைவாழை விருந்து.. ருசியில் மயங்கி விழுந்த பெண்கள் - "End-ல அந்த பாயசம் எங்கடாதான்.."
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் வெளிநாட்டினருக்கு தலைவாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது.
இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றனர். மாநாட்டின் இறுதி நாளில், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வடை பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது.
அப்போது தலை வாழை இலையில் கூட்டு, சம்பார், பொறியல், பாயசம் போடப்பட்டு விருந்து பறிமாறப்பட்டது. வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு பிடித்த கூட்டு, பொறியல், அப்பளம், பாயசம் ஆகிய உணவு பொருட்களை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தனர். அப்போது
வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் சாம்பார் சாப்பாட்டினை ருசித்து சாப்பிட்டனர்
