" பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கான நிதி போதவில்லை" - ஆ.ராசா எம்.பி.

x

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு மற்றும் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 3 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 2 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் நிதியை கொண்டு பழங்குடியினர் வீடுகளை கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளதாக கூறினார். எனவே நிதி உயர்த்தி வழங்க நாடாளுமன்ற கூட்ட தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றும், ஆ.ராசா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்