காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த முழு தகவல்கள் | Kaveri | Gundar | Vaigai

x

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்...

காவிரி ஆற்றினை, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டமே காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம்.

இந்த திட்டத்துக்காக மொத்தம் 262 புள்ளி19 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில், இத்திட்ட பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக காவிரி கட்டளை கதவனை முதல் தெற்கு வெள்ளாறு வரை 118 புள்ளி 45 கிலோ மீட்டர் தொலைவுக்கும்,

இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 110 கிலோ மீட்டர் தொலைவுக்கும்,

மூன்றாம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 34 கிலோ மீட்டர் தொலைவுக்கும் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

முதற்கட்ட பணிக்காக 6 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில்,

கரூர் மாவட்டத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கும், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 331 கோடி ரூபாய் செலவில் வெள்ள நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் 59 சதவீதம் நிறைவடைந்த நிலையில், முதற்கட்ட பணிக்காக கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சுமார் 52 ஆயிரத்து 332 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


Next Story

மேலும் செய்திகள்