5-ஆம் தேதி முதல்...அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆவின் | Aavin Company | Aavin Products

ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் உற்பத்தியாளர்களிடம் இருந்து 40 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த 19.08.2019 முதல், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 41 ரூபாயாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

இடுபொருள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் கூடியுள்ளதால், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை 32 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், எருமைப்பாலின் கொள்முதல் விலை 41 ரூபாயில் இருந்து 44 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

இதனால், 4 லட்சத்து 20 ஆயிரம் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பலனடைவார்கள் என்று ஆவின் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com