காவலர் முதல் IPS வரை... தொடரும் தற்கொலைகள் என்ன நடக்கிறது காவல்துறையில்..?

x

காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள், அதிக மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா முதல் தற்போது டிஐஜி விஜயகுமார் வரை உயர் அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்ட‌தும் அடங்கும். காவலர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், விடுமுறை கிடைக்காமல் ஓய்வின்றி பணி செய்கிறார்கள். வீட்டை விட்டு மிக தூரமாக வந்து பணி செய்வதால், வீட்டில் உள்ள நபர்களிடம் அன்பாக இருக்க முடியவில்லை என்ற ஏக்கத்திலேயே மன அழுத்த‌த்தில் இருக்கிறார்கள். இதனால் தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது. உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள காவலர்களின் பணிகள், பிரச்சினைகளை கேட்டு, தீர்க்க முயற்சித்தால், காவலர்களின் தற்கொலைகளை தடுக்கலாம் என்கிறார் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜாராம்.


Next Story

மேலும் செய்திகள்