"மெரினாவில் மே முதல்..."- வெளியான அறிக்கை | Marina Beach | Metro

x

சென்னை மெரினாவில்,700 மெட்ரிக் டன் எடை கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் மே மாதம், சுரங்கம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு 3 வழிதடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினாவில் வருகிற மே மாதம், தொடங்கும் சுரங்கம் தோண்டும் பணி கச்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் சுரங்கம் அமைக்கப்பட்டு, இறுதியாக மே 2025 - இல் போட் கிளப்பை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு வரை மேற்கொள்ளப்படும் சுரங்கப்பணிகள், பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்