லோன் முதல்... Porn வெப்சைட் வரை... விளம்பரங்கள் மூலம் வலை விரிக்கும் கும்பல்

x


"சார்... கார்ட் மேல இருக்குற 16 நம்பர சொல்லுங்கோ.."

இப்படி பாதி தமிழும் ஹிந்தியும் கலந்து பேசி, பாக்கெட்டை காலி செய்த வட இந்திய கொள்ளையர்கள் ஏராளமானோரை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி ஒரு மோசடி மண்னர்கள் இருவரை தான் தஞ்சாவூர் போலீசார் தற்போது தட்டி தூக்கி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் வட இந்தியர்கள் அல்ல இருவருமே பச்சை தமிழர்கள்.

லோன் கொடுக்கிறோம் என்ற பெயரில், கிட்டத்தட்ட 17 லட்சம் ரூபாயை உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆட்டையை போட்டிருக்கிறார்கள் இந்த பலே கில்லாடிகள்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதில் ஆன் லைனில் லோன் தருவதாக கூறியிருக்கிறார்கள்.

இதனை நம்பிய சுரேஷ் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்த நம்பருக்கு கால் செய்திருக்கிறார். எதிர் முனையில் பேசிய நபர் சுரேஷின் ஆதார் கார்ட், பான் கார்ட், போன்ற ஆவணங்கள் அத்தனையும் வாட்டஸ் அப்பிலேயே கேட்டு வாங்கி இருக்கிறார்.

டாக்குமென்ட் பிராஸசிங் என்ற பெயரில் சில நாட்கள் தாமதித்த அந்த கும்பல், திடிரென கால் செய்து உங்களுக்கு லோன் அப்ரூவல் ஆகியிருக்கிறது என கூறி இருக்கிறார்கள். ஆனால் வங்கிக் கணக்கில் குறைந்தது 25 ஆயிரமாவது இருந்தால் தான் லோன் கிடைக்குமென கண்டிஷன் போட்டிருக்கிறார்கள். இதனால் அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்களிடம் இருந்து கைமாத்தாக பணம் வாங்கி மினிமம் அமொவுண்டை சேர்ந்திருக்கிறார் சுரேஷ்.

ஆனால் அந்த மர்ம நபரோ ஏடிஎம் நம்பரை கொடுத்தால் தான் வெர்ஃபிகேஷன் செய்ய முடியும் என்று கூறி இருக்கிறார்.

எவ்வளவோ கொடுத்துட்டோம் இதை கொடுக்க மாட்டோமா என சதாரணமாக நினைத்த சுரேஷ், தனது கார்டு மேல், கீழ், சைடு என பிரிண்டாகி இருந்த அத்தனை நம்பர்களையும் அச்ச்சுபிசகாமல் ஒப்பித்திருக்கிறார்.

அடுத்த சில நொடியிலேயே, அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. பணம் ஏறிய மெசேஞ்சாக இருக்கும் என புன்னகையோடு திறந்து பார்த்தவருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

வந்தது கிரிடிட் மெசேஜ் அல்ல டெபிட் மெசேஜ். அக்கோண்டில் இருந்த 25 ஆயிரமும் வழித்து எடுக்கப்பட்டதை அறிந்த சுரேஷ், மீண்டும் அந்த நம்பருக்கு கால் செய்திருக்கிறார். ஆனால் அது ஸ்சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார், ஃபோன் வந்த செல்போன் சிக்னலை ட்ராக் செய்திருக்கிறார்கள். அப்போது அந்த மர்ம கும்பல் அரக்கோணத்தில் ஆபீஸ் போட்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உடனே அங்கு விரைந்த போலீசார் கார்த்திசன் என்பவரையும், அவரது கூட்டாளியையும் கூண்டோடு கைது இருக்கிறார்கள்.

அரக்கோணத்தில் 3 இடத்தில் வாடகைக்கு அறைகளை எடுத்த இருவரும்,

47 செல்போன்கள், 19 சிம்கார்டுகள் என மினி கால் சென்டரையே நடத்தி வந்திருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னதாக தொழிலை தொடங்கிய இந்த இருவரும் குறுகிய காலத்தில், 17 மாவட்டங்களில், 31 பேரிடம் இருந்து 17 லட்சத்திற்கு மேல் மோசடி செய்திருக்கிறார்கள்.

லோன் ஆசை காட்டி 17 லட்சத்தை சுருட்டிய கும்பலை போலவே, மற்றொரு கும்பல் ஆபாச லிங்கை அனுப்பி பல ஆயிரங்களை அபேஸ் செய்திருக்கிறது.

புதுச்சேரியில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு அனுதினமும் பல வினோதமான மோசடி புகார்கள் வந்து கொண்டே இருக்கும்.

PAN கார்டு அப்டேட்... ஏடிஎம் ரினிவல்.. ஆன் லைன் லோன்.. என பல கலர் கலர் ரீல்களில் கைவரிசை காட்டியவர்கள் தற்போது ஆபச படம் பார்பவர்களை குறி வைத்திருக்கிறார்கள்.

புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் ஆபாச பட வெப்சைட்டுகளுக்கு அடிமையாகி இருக்கிறார்.

அந்த இளைஞரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட இணையதளம் அவருக்கு ஒரு popup செய்தியை காட்டி இருக்கிறது. "மாடல் அழகிகளோடு வீடியோ சாட் செய்ய வேண்டுமா clik here" என நோட்டிஃபிகேஷன் வந்திருக்கிறது.

இதைப்பார்த்த அந்த இளைஞரும் ஆர்வம் தாங்காமல் சொன்ன இடத்தில் கிளிக்கி இருக்கிறார். அடுத்த நொடியே டார்க் வெப்புக்குள் அவரை இழுத்துச் சென்றிருக்கிறது அந்த லிங்க். ஒரு கட்டத்தில் அவரது ஆனந்த பயணத்திற்கு ஸ்பீடு பிரேக் போட்ட அந்த வெப்ஸைட், கட்டணம் செலுத்தினால் தான் கேட் திறக்கும் என கூறி இருக்கிறது. இதை நம்பிய அந்த இளைஞர் தனது ஏடிஎம்-ஐ பயன்படுத்தி சில பல ஆயிரங்களை அனுப்பி இருக்கிறார். ஆனால் பணம் போனது தான் மிச்சம், மாடல் அழகியும் வரவில்லை, அந்த வெப்ஸட்டும் open ஆகவில்லை. இதனால் அதிர்ந்து போனவர் சைபர் கிரைம்போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.காவல்துறையும் அவர்கள் பங்கிற்கு தினம்தினம் விழிப்புணர் பிரச்சாரங்களை செய்து வந்தாலும்.. மக்கள் அந்த மாயவலையில் சிக்கிக் கொள்வதை தடுப்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்