2009 முதல் 2014 வரை.... சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை தட்டி சென்ற படங்ககள்

x

தமிழக அரசின் சார்பில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், 2009 ஆம் ஆண்டுக்கான ​சிறந்த படமாக பசங்க திரைபடத்திற்கு முதல் பரிசும், மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு 2-ம் பரிசும், அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.2010 ஆம் ஆண்டுக்கான ​சிறந்த படத்திற்கான விருதை பொருத்தவதை மைனா முதல் பரிசும், களவாணி 2-ம் பரிசையும், புத்ரன் மூன்றாம் பரிசை பெற்றது.2011 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதல் 3 விருதினை, வாகை சூடவா, தெய்வத்திருமகள், உச்சிதனை முகர்ந்தால் ஆகிய படங்களுக்கும், மெரினா படத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.2012 ஆம் ஆண்டின் சிறந்த படமாக வழக்கு எண் 18 இன் கீழ் ஒன்பதுக்கு முதல் பரிசும், சாட்டை படத்தி​ற்கு 2வது பரிசும், மூன்றாம் பரிசு தோனி மற்றும் சிறப்பு பரிசு கும்கி படத்துக்கும் வழங்கப்பட்டது.2013 ஆம் ஆண்டுக்கான ​சிறந்த படம் என ராமானுஜம் திரைபடத்திற்கு முதல் பரிசும், தங்கமீன்கள் படத்திற்கு 2-ம் பரிசும், பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு 3-ம் பரிசும், ஆள் படத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதல் 3 விருதினை, குற்றம் கடிதல், கோலிசோடா, நிமிர்ந்து நில் ஆகிய படங்களுக்கும், காக்கா முட்டை படத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்