தேர்வு முடிந்து கொண்டாட சென்ற நண்பர்கள் - கடற்கரையில் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. புதுச்சேரியில் பரபரப்பு

x

புதுச்சேரியில் கடலில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

புதுச்சேரியை சேர்ந்த ஜீவகன் என்ற பள்ளி மாணவன், 10ஆம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில், கடற்கரையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென எழுந்த அலையில் சிக்கி ஜீவகன் நீரில் மூழ்கியுள்ளார். நண்பர்கள் கூச்சலிட்ட நிலையில் உடனடியாக விரைந்த கடலோர காவல் படை போலீசார், ஜீவகனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த முதலியார்பேட்டை போலீசார், பள்ளி மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்