2018ல் கூட்டாக கொலை செய்த நண்பர்கள்...இப்போ தோழியை கொலை செய்த தோழன் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

x

2018ல் கூட்டாக கொலை செய்த நன்பர்கள்...இப்போ தோழியை கொலை செய்த தோழன் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

நிலத்தகராறில் பழங்குடியின பெண்ணை அவரின் நண்பரே கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட முனியரா பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மா. 66 வயதான இவரும் இவரது நண்பரான சுரா என்பவரும் கடந்த 2018ல் முனியரா பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரை கொலை செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் அழகம்மாவை சுரா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மா உயிரிழந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுராவே அவரை கொலை செய்தது தெரியவந்தது. நிலம் தொடர்பான ஆவணங்களை அழகம்மா மறைத்து வைத்திருந்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் அழகம்மாவை கொன்றதும் உறுதியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்