வீட்டினுள் வைத்து சூதாட்டம் ஆடிய நண்பர்கள்... அதிக பணத்தை இழந்ததால் இளைஞர் ஆத்திரம்

x

பல்லடம் அருகே அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்.

இவர் தனது வீட்டில் நண்பர்களுடன் சூதாட்டம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதில், மாசானம் என்பவர் அதிகப்படியான பணத்தை இழந்ததால் விரக்தியடைந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஆட்களை அழைத்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட மாசானம், அன்றும் தோற்றதால் 3 நண்பர்களையும் ஆட்களின் உதவியோடு கடத்தியுள்ளார்.

இதில், பிரபாகரன், பிரகாஷ் மற்றும் மனோஜ் ஆகிய 3 பேரை நிர்வாணமாக விடியோ எடுத்து 5 லட்சம் பணம் கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மூவரும் அளித்த புகாரின் அடிப்படையில், மாசானம் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்