"சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா!"- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விரைவில் இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

குடியரசு தின விழாவை ஒட்டி, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

அதில், பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு புதுச்சேரியில் இலவச மனைப்பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com