திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, இலவச பிரியாணி வழங்கிய பிரபல பிரியாணி கடைக்கு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் பிரியாணி கடை சார்பில், பொதுமக்களுக்கு இலவச பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்கனவே ஆம்பூர் பேருந்து நிலையத்தில், சாலை விரிவாக்க பணி மற்றும் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், புழுதி நிறைந்து போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டு வருகிறது.
திடீரென தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் கொட்டகை அமைத்து பொதுமக்களுக்கு இலவச பிரியாணி வழங்குவதாக அறிவித்ததால், இலவச பிரியாணியை வாங்க பொதுமக்கள் கூட்டம் முண்டியடித்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
. இந்த நிலையில் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இலவச பிரியாணி வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு, கடை நிர்வாகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.