சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடி...பணத்தை மீட்க கடத்தலில் இறங்கிய இளைஞர்கள்...

x

கிருஷ்ணகிரி,

ஈரோடு - சத்தியமங்கலம்

சினிமா ஆசை காட்டி பல லட்சம் மோசடி...

தயாரிப்பாளரை காரில் கடத்திய இளைஞர்கள்...

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடி...

பணத்தை மீட்க கடத்தலில் இறங்கிய இளைஞர்கள்...

பணத்தை மீட்க அரங்கேறிய கடத்தல்...

கிளைமேக்ஸில் காத்திருந்த டிவிஸ்ட்...

சினிமாவில் நடிக்குற ஆசையில பணத்தை கொடுத்து ஏமாந்த மூனு இளைஞர்கள் போலீசை நம்பாம, சட்டத்த அவங்களே கையிலெடுத்திருக்காங்க... கடைசியில அது அவங்கள எங்க கொண்டு போய் நிக்க வைச்சது தெரியுமா?

சினிமா வாய்ப்பு தேடி வருபவர்களிடம் கமிஷனாக டிஃபன் மட்டும் வாங்கிக் கொள்ளும் சில ஃபிலிம் மேக்கர்ஸை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் நாலு இட்லி ஒரு வடைக்கெல்லாம் வாய்ப்புக் கொடுத்த காலம் மலை ஏறி விட்டது. தற்போது அட்மாஸ்பியரில் நிற்பதற்கு பல ஆயிரங்கள், டைலாக் பேச சில லட்சங்கள் என பணத்தை கொட்டிக் கொடுத்தாவது செல்லுலாய்டு உலகத்தில் சிறகடித்துவிட வேண்டுமென பல இளைஞர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படித்தான் பிசி ஸ்ரீராமின் ஃபிரேமில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டுமென கனவோடு இருந்தவர்கள் கடைசியில் நமது செய்தியாளரின்

காமிராவில் குரங்குக் குல்லாவோடு என்ட்ரிக் கொடுத்திருக்கிறார்கள்.


யார் இவர்கள்...? அவார்ட் ஃபங்ஷனுக்கு ஆடிக்காரில் வந்து இறங்க ஆசைப்பட்டவர்கள் கடைசியில் கைதாகி காவல் துறை வாகனத்தில் வந்திறங்க காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடைகாண இவர்களது கதையை டைட்டில் கார்டு வரை ரீவைண்ட் செய்து பார்த்தோம்

கையில் செல்போனோடு கவலையாக உட்காந்திருக்கும் இவர் தான் கிருஷ்ண பிரசாத்.

கன்னட சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கும் இவர், ஒரு சில குறும்படங்களை தயாரித்தோடு, சில திரைபடங்களை வினியோகமும் செய்திருக்கிறார்.

கன்னட மக்களுக்கு தமிழ் நாட்டின் அழகை படம்பிடித்துக் காட்ட நினைத்த கிருஷ்ண பிரசாத் கடந்த வருடம் சத்திய மங்கலத்திற்கு லொக்கேஷன் தேடி வந்திருக்கிறார். அப்போது அவருக்கு அறிமுகமான லோக்கல் கைகள் தான் இந்த கார்த்திகேயன், கரிகாலன், சிவசக்தி ஆகிய மூவரும்.

இயல்பிலேயே இவர்களுக்கு சினிமா ஆசை இருந்ததால் அதை கொஞ்சம் தூண்டிவிட்டு பணம் பார்க்க நினைத்திருக்கிறார் கிருஷ்ண பிரசாத். அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் மூவரையும் நடிக்க வைப்பதாக கூறி பணம் கேட்டிருக்கிறார் கிருஷ்ண பிரசாத்.

மூவரும் உருட்டி பெறட்டி 2.50 லட்சம் ரூபாயை கிருஷ்ணபிசாத்திடம் கொடுத்திருக்கிறார்கள்.

பணத்தை வாங்கிக் கொண்டு கர்நாடகாவுக்கு பறந்த கிருஷ்ணபிரசாத், அதன்பிறகு தமிழ் நாட்டு பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை.

டிரைக்டர் வருவார்... ஆக்‌ஷன் கட் சொல்வார் என வழி மேல் விழிவைத்துக் காத்திருந்த மூன்று இளைஞர்களும் பல முறை தொடர்பு கொண்ட பிறகு கிருஷ்ண பிரசாத் தமிழகம் வரவே இல்லை. கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை லேட்டாக புரிந்து கொண்ட இளைஞர்கள் கொடுத்த பணத்தை மீட்பதற்காக அவர்களே ஒரு திரைக்கதையை எழுதி இருக்கிறார்கள்.

இவர்களது திரைகதையின் முதல் கதாப்பாத்திரம் தான் இந்த அருண்.

கிருஷ்ணபிரசாத்திற்கு ஃபோன் செய்த அருண் தான் ஒரு இயக்குனர் என்றும் தன்னிடம் ஒரு பக்காவான ஸ்கிரிப்ட் இருப்பதாகவும் கூறி கதை கேட்க கிருஷ்ண பிரசாத்தை கிருஷ்ணகிரிக்கு வரச்சொல்லி இருக்கிறார்.

அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே கிருஷ்ண பிரசாத் வந்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று, நான்கு பேரும் ஒரு ஆம்னி வேனை எடுத்துக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு விரைந்திருக்கிறார்கள். திட்டமிட்டபடியே ரோட்டில் வைத்து கிருஷ்ண பிரசாத்தை அவர்கள் கடத்தியிருக்கிறார்கள்.

அவர்களின் நோக்கம் கிருஷ்ண பிரசாத்திடமிருந்து பணத்தை வாங்கி கொண்டு அவரை விட்டுவிட வேண்டும் என்பது தான்.

ஆனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே, உஷாரான போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அனைத்து செக்போஸ்ட்டுக்கும் அலார்ட் கொடுத்திருக்கிறார்கள்.

சத்திய மங்கலத்தில் நடந்த வாகன சோதனையில்

கடத்தல்கும்பல் கையும் களவுமாக சிக்கி இருக்கிறது.

பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர் மீது காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தால் கிருஷ்ணபிரசாத் கம்பி எண்ணுவதை

அந்த இளைஞர்கள் வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கும், ஆனால் சினிமா தனமாக யோசித்து செய்த ஒரு விபரீதம், ஏமாந்தவர்களையே குற்றவாளியாக்கி கூண்டில் ஏற்றி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்