500 கோடிக்கு மேல் மோசடி... கணவன் மனைவி சேர்ந்து செய்த பகீர் செயல் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஹிஜாவு நிதி நிறுவனம், பொதுமக்களுக்கு 15 சதவீத வட்டி தருவதாக கூறி 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, இதுவரை 14 பேரை செய்து, அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 80 லட்சம் மதிப்புள்ள எட்டு கார்கள் ஆகிவற்றை கைப்பற்றினர். நிறுவனத்தின் இயக்குனரான அலெக்சாண்டர், முகவர்கள் ஆகியோர் தொடர்ந்து வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பதால் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்ட சுஜாதா கந்தா மற்றும் அவரது கணவரும் ஐ.சி.எப் ஊழியருமான கோவிந்தராஜுலுவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள், பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. கைதான இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்