2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 10% கமிஷன் தருவதாக மோசடி..திருப்பூர் அருகே பரபரப்பு

x

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரைச் சேர்ந்த ஜெயராமன், கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், காளம்பாளையத்தைச் சேர்ந்த பைனான்சியர் சபரிநாதனை அணுகி, தன்னிடம் 30 லட்ச ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 10 சதவீத கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி, 500 ரூபாய் நோட்டுகளாக 30 லட்ச ரூபாயைக் கொடுத்த சபரிநாதனிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஜெயராமன் தப்பிச் சென்றார். இதுதொடர்பாக, பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் சபரிநாதன் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயராமனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சிவராமன், சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்