வேலை வாங்கி தருவதாக மோசடி.." பணத்தை திருப்பி கேட்டா மிரட்டுறாங்க" - பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்

x

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஆள்தேர்வு செய்வதாக கூறி, நேர்முகத் தேர்வு நடத்தி பண மோசடி செய்த கும்பல் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஜோஸ்பின் என்பவர், நிரந்தர வேலை கிடைப்பதற்காக, தனக்கு அறிமுகமான கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் 42 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்,

இதேபோல், 28 பேரிடம் இருந்து தலா 42 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரில் பேனர் வைத்து கடந்த ஆண்டு ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் நேர்முகத்தேர்வு நடத்தியுள்ளனர். ஒரு வருட காலம் ஆகியும் சொன்னபடி பணி நியமனம் பெற்றது தராததால், ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட போது, மேலும் தாமதமாகும் என்று கூறியதாகவும், பணம் திருப்பிக் கேட்டால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, திருச்சி கன்டோன்மென்ட் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்