பத்திரபதிவில் தில்லுமுல்லு..! வருமான வரித் துறை திடீர் ஆய்வு

x

தமிழகம் முழுவதும் நிலமதிப்பை குறைத்துக் காண்பித்து பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் அலுவலகங்களை வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது.

சார்பதிவாளர் அலுவலகங்களில், 30 லட்சம் ரூபாய்க்கு மேலாக பணப்பரிவர்த்தனை உள்ள பத்திரப்பதிவுகளுக்கு முறையாக கணக்கு காட்ட வேண்டும். ஆனால், பான் மற்றும் ஆதார் இல்லாமலேயே 30 லட்சம் ரூபாய் மேல் பத்திரப்பதிவு செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சார்-பதிவாளர் அலுவலகத்திலும் விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகை, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட தொகை, நிதி பரிவர்த்தனை அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட தொகை, ஒரே மாதிரி உள்ளதா என வருமான வரித் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில், பாதிக்கு மேல் சரியான முறையில் கணக்கு காட்ட வில்லை என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும், முறையாக கணக்கு சமர்ப்பிக்காத சார்-பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையை தொடங்கி உள்ளது.

முதல் கட்டமாக, சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்