ஒமன் விமான நிலையத்தில் வேலை எனக் கூறி மோசடி - மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கை

x

ஓமன் விமான நிலையத்தில் வேலை அளிப்பதாக அழைத்துச் சென்று, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்துவதாக தமிழகத்தைச் சேர்ந்த 16 பேர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர்களின் உறவினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஓமன் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்த முகவரிடம் இதுகுறித்து கேட்டால், அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி, ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஓமன் நாட்டுக்குச் சென்றவர்கள், கண்ணீருடன் கோரிக்கை விடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்