என்ஐஏ அதிகாரி என கூறி மோசடி..துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய போலி என்ஐஏ அதிகாரி

x

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், பொருளாதார குற்றபிரிவில் உதவி ஆணையராக இருப்பதாக பாலாஜி தெரிவித்து இருக்கிறார். விஜயகுமார் தனது தொழிலை விரிவு படுத்துவதற்க்காக, வங்கியில் கடன் வாங்க முயற்சித்த போது, தனக்கு வங்கி உயர் அதிகாரிகளை தெரியும் எனவும் , எளிதாக கடன் வாங்கி தருவதாகவும் கூறி பாலாஜி உறுதியளித்திருக்கிறார். இதற்காக, விஜயகுமாரிடம் இருந்து பல தவணைகளில் 10 லட்சம் ரூபாயை பாலாஜி பெற்ற நிலையில், தான் என்ஐஏ வில் அதிகாரியாக இருப்பதாவும், பணத்தை திரும்ப தரமுடியாது எனவும் கூறிய பாலாஜி துப்பாக்கியை காண்பித்து மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன விஜயகுமார் ராமாபுரம் காவல் நிலையத்தில்அளித்த புகாரின் அடிப்படையில், பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்