" தாய்மொழி இருக்க அந்நிய மொழி எதற்கு..?" - முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

x

சென்னையில் பழம்பெரும் பின்னணி பாடகரான இசை மேதை கண்டசாலா வெங்கடேஷ்வர ராவின் 100-ஆம் ஆண்டு விழா மற்றும் கலா பிரதக்ஷனி கண்டசாலா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, டிரம்ஸ் சிவமணி, தோட்டா தரணி, ரஞ்சனி ரமணி, தயாபன், வயலின் கலைஞர் அவசரலா கன்னியாகுமரி, சுதாராணி ரகுபதி ஆகியோருக்கு விருதை வெங்கையா நாயுடு வழங்கி கௌரவித்தார்.

விழாவில் பேசிய அவர், உலக மொழிகளில் மிகவும் பழைமையான மொழியான தமிழ் மொழி இருக்க, எதற்காக வெளிநாட்டு மொழியைத் தேடிச் செல்ல வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்