பேஸ்புக்கில் வீடியோ போட்ட முன்னாள் மாநில செயலாளர் - ஜிஎஸ்டி சாலையை சூழ்ந்த பாஜகவினர்

x

பாஜக முன்னாள் மாநில செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் பகுதியில் வசித்து வருபவர் துரை தனசேகரன். பாஜக முன்னாள் மாநில செயலாளரான இவர், தனது முகநூல் பக்கத்தில், திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இது குறித்து, விசாரணை மேற்கொள்வதற்காக, துரை தனசேகரன் மற்றும் நான்கு பேரை போலீசார், காவல் நிலையம் அழைத்திருந்தனர்.

விசாரணை முடிந்து வீடு திரும்பும் போது, அந்நான்கு பேரும் துரை தனசேகரன் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்யக்கோரி பாஜகவினர் ஜிஎஸ்டி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்