முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - தெளிவாக சொன்ன உச்ச நீதிமன்றம் | supreme court

x

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் நான்கு மாதங்களுக்கோ அல்லது விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பும் வரை மட்டுமே தொடரும் என உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பான வழக்கில்,

ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஜாமின் நான்கு மாதங்களுக்கோ அல்லது விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பும் வரை மட்டுமே தொடரும் என தெளிவுப்படுத்தினர். மேலும் விசாரணை நீதிமன்றம் சம்மன் அளிக்கும் பட்சத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்