கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு - கோட்டயம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் விடுமுறை

x

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல், நாளை அவரது சொந்த ஊரான புதுப்பள்ளியில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

கேரளாவின் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி, நேற்று பெங்களூரூவில் காலமானர். இதனையடுத்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு, பொதுமக்களும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் உம்மன் சாண்டியின் உடல், இன்று அவரது சொந்த ஊரான கோட்டயம் மாவட்டத்திலுள்ள புதுப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது பூர்விக வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து நாளைய தினம் புதுப்பள்ளி தேவாலயத்தில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி கோட்டயம் மாவட்டத்தில் போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அம்மாவட்ட பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்