பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் சுற்றுப்பயணம்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் சுற்றுப்பயணம்
Published on

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார். ரஷ்யா நடத்திவரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தார். அப்போது, போரின் பாதிப்புகள் குறித்து செலன்ஸ்கியிடம் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com