ஒரு நிமிடத்தில் பிகில் விஜய்யாக மாறிய அதிமுக முன்னாள் அமைச்சர்

x

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் புல்லட் பைக்குள் மற்றும் தங்க மோதிரங்கள் வழங்கி அசத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு வானகரத்தில் தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கால்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டனர். இரவு, பகலாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தின. இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டில் சென்னை சேர்ந்த இரு அணிகள் மோதின. இதில், சென்னை மந்தவெளியை சேர்ந்த அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் புல்லட் பைக்குகள் பரிசாக வழங்கிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், வீரர்களுக்கு தலா கால் சவரன் தங்க மோதிரத்தை வழங்கி சிறப்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்