வெயிலின் தாக்கத்தால் மளமளவென பற்றிய காட்டுத்தீ... மலையடிவார கிராம மக்கள் கடும் அச்சம்

x

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், வெயிலின் தாக்கத்தால் காட்டுத் தீ பற்றி எரிகிறது. மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள சத்திர வெள்ளாளபட்டி, வலையபட்டி, அரசம்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், காட்டுத்தீயால் அச்சம் அடைந்துள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் காட்டுத்தீ மளமளவென பரவி அருகிலிருக்கும் மலைகளுக்கும் பரவுகிறது. இதனால், தீயணைப்பு துறையினர் விரைந்து காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்