பிரார்த்தனை செய்த கன்னியாஸ்திரிகளை நெருங்கிய காட்டுத்தீ - பரபரப்பு காட்சி

x

கிரீஸ் நாட்டில், காட்டுத் தீ நெருங்கி வரும் நிலையில், கன்னியாஸ்திரீகள் சிலர் பிரார்த்தனையில், ஈடுபட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மந்த்ரா பகுதியில் செயல்பட்டு வரும் காண்வென்ட் அருகே, காட்டுத் தீ நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஹெலிக்காப்டர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அப்போது, காட்டுத் தீ நெருங்கி வரும் பகுதியில் உள்ள காண்வென்ட்டில் கன்னியாஸ்திரீகள் சிலர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கான்னியாஸ்திரீகளை அங்கிருந்து வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்