"மருதாணி செவப்பு செவப்பு.."பாடலுக்கு வெளிநாட்டவர்கள் போட்ட குத்தாட்டம்
"மருதாணி செவப்பு செவப்பு.."பாடலுக்கு வெளிநாட்டவர்கள் போட்ட குத்தாட்டம்
மாமல்லபுரத்தில், கோயில் திருவிழாவையொட்டி கடற்கரையில் நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். மாமல்லபுரம் மீனவர் பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் கூழ்வாற்றல் மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது. அம்மன் வீதி உலாவைத் தொடர்ந்து, கடற்கரையில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, அப்பகுதி மக்களுடன் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகளும் பார்த்தனர். அப்போது, பாடலுக்கு ஏற்ப சுற்றுலாப் பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர். மேடையில் நடந்த நிகழ்ச்சியோடு, வெளிநாட்டினரின் நடனத்தையும் பார்த்து அப்பகுதி மக்கள் ரசித்தனர்.
Next Story