பள்ளியில் மகன் உயிரை காவு வாங்கிய அப்பா வாங்கிவந்த வெளிநாட்டு சாக்லேட்

வெளிநாட்டிலிருந்து தந்தை ஆசையாய் வாங்கிவந்த சாக்லேட் தொண்டையில் சிக்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங் என்பவர், தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவர், தனது குழந்தைகளுக்காக ஆசை ஆசையாக சாக்லேட் வாங்கி வந்தார். கங்கன் சிங்கின் எட்டு வயது மகன் சந்தீப், தந்தை வாங்கி வந்த சாக்லேட்டை பள்ளிக்கு எடுத்துச்சென்றான். வகுப்பறையில் சாக்லேட்டை ருசித்தபோது, தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக சிறுவனை மீட்ட ஆசிரியர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தான். தந்தை ஆசையாய் வாங்கிவந்த சாக்லேட் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்