"3,600 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு" - Ford நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு

x
  • ஐரோப்பாவில் 3,600 பேரை வேலையை விட்டு நீக்கவுள்ளது, Ford நிறுவனம்.
  • கார் தயாரிப்பு நிறுவனமான Ford, சென்ற ஆண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள தங்களின் ஊழியர்கள் மூவாயிரம் பேரை வேலையை விட்டு தூக்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தது.
  • இந்நிலையில், தயாரிப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் துறையில் வேலை புரியும் தங்களின் ஊழியர்கள் மூவாயிரத்து 600 பேரை மீண்டும் வேலையை விட்டு நீக்க Ford நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இம்முறை ஐரோப்பாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருக்கும் Ford நிறுவனம், ஜெர்மனியில் சுமார் இரண்டாயிரத்து 300 பேரையும், பிரிட்டனில் ஆயிரத்து 300 பேரையும் பிற ஐரோப்பிய நாடுகள் 200 பேரையும் வேலையை விட்டு தூக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்