கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு - நாளை தேர்வு.. இன்றே கசிந்த வினாத்தாள்..! | Madurai

மதுரையில், கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக கடந்த 7ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், நாளை காலை 22 தேர்வு மையங்களில் எழுத்தறிவுத் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆங்கில திறனறிவுத் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனிடையே, வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com