"முதல்முறையாக காவல்துறையில் No Vacancy.." - தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு

x

தமிழ்நாட்டில் முதன்முறையாக காவல்துறையில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளதாக, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். பழங்குடியினருக்கான குற்றங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளை முறையாக கையாள்வது குறித்து, 50 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு உதகையில் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் 37 மாவட்டங்களை சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்