2 நாட்களாக வீட்டின் மேலிருந்து வந்த சத்தம் | அச்சத்தில் உறைந்த குடும்பம்

x

கேரளாவில் வீட்டின் மேற்பகுதியில் இருந்து கொண்டு 2 நாட்களாக அச்சுறுத்திய மலைபாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். கோட்டயம் மாவட்டம் எருமேலி சாக்காலை பகுதியில் அப்துல் நாசர் என்பவரது வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டில் இரு நாட்களாக சத்தம் வந்துள்ளது. வீட்டின் மேல் பகுதியில் இருந்து சத்தம் வந்ததால், ஓட்டின் மீது எறி அப்துல் நாசர் பார்த்துள்ளார். அப்பொழுது பெரிய மலை பாம்பு ஒன்று ஓடுகளின் இடுக்கில் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் மலை பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்


Next Story

மேலும் செய்திகள்