கால்பந்து உலகக்கோப்பை..கத்தாரில் ஆட்டம் ஆரம்பம்.. - எகிறும் எதிர்பார்ப்பு

x

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 22வது சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை தொடர், கத்தாரில் இன்று ஆரம்பமாகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை நடப்பது இதுவே முதல் முறை. இன்று தொடங்கும் போட்டிகள் லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று என அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெற உள்ளன. 32 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், தொடரை நடத்தும் நாடான கத்தார், ஈக்வடார் உடன் மோத உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்