தமிழகத்தை உலுக்கிய பிரியா மரணம் - 2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த மருத்துவர்கள்

x

தவறான சிகிச்சையால் கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு மருத்துவர்களிடமும் தனித்தனியாக விசாரணை குழு சுமார் 2 மணி நேரமாக விசாரணை நடத்தியது.

மாணவி பிரியா, சிகிச்சைக்கு வந்தது முதல், இறப்பு வரை என்னென்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு, இரு மருத்துவர்களும் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனவும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட செவிலியர்கள் மற்றும் மீதமுள்ள மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்