பிரியா மரணம் எழுப்பிய 12 கேள்விகள்.. பதில்களை கேட்டு அதிர்ந்த காவல்துறை -"2 பேர் அல்ல 5 பேர் காரணம்"

x

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்திற்கு மருத்துவ பணியாளர்கள் கவனகுறைவாக செயல்பட்டதே காரணம் என மருத்துவ அறிக்கை போலீசாரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையில் காலை இழந்த, கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை தேவையா? எந்த மருத்துவ முகாந்திரத்தின் அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது? என்பது உள்பட 12 கேள்விகளுடன் காவல்துறை தரப்பில் மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் பதில் கோரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த மருத்துவ கல்வி இயக்குனரகம் பதில்களை சமர்பித்துள்ளது.

அந்த மருத்துவ அறிக்கையில், குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரமை தவிர்த்து மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், பணியில் இருந்த செவிலியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு சுழற்சி முறையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களும் கவனக்குறைவாக செயல்பட்டுள் ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்டதன் விளைவாகவே மரணம் நிகழ்ந்திருப்பது அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு முக்கிய மருத்துவர்கள் மீது கவனக் குறைவாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் தவிர வேறு எந்த சட்டப்பிரிவினில் வழக்கு பதிவு செய்யலாம் என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் முதல் தகவல் அறிக்கையில் சட்டப்பிரிவுகள் மாற்றப்படும் எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து இரண்டு மருத்துவர்களுக்கும் முறையாக சம்மன் அனுப்பப்படவுள்ளது. சம்மனை பெற்றுக் கொள்ளாமல் மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பது போலீசார் தரப்பில் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை கைது செய்யவும் தயாராக இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா மரணம் - மருத்துவ அறிக்கை விபரம் "மருத்துவர் பால்ராம் சங்கர், சோமசுந்தரம், மயக்க மருந்து மருத்துவர், செவிலியர்கள் பணியில் கவனக்குறைவு" "அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் சுழற்சி முறையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களும் பணியில் கவனக்குறைவு " கவனக்குறைவாக செயல்பட்டதன் விளைவாகவே மரணம் நிகழ்ந்திருப்பது அறிக்கையின் மூலம் உறுதி

"இரண்டு முக்கிய மருத்துவர்கள் மீது கவனக்குறைவாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என வழக்கு"

இந்திய தண்டனைச் சட்டம் தவிர்த்து வேறு எந்த சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது போலீஸ் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்