"இளம் வீரர்களை காப்பது நமது கடமை" மனம் உடைந்து டிவிட் செய்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் G. V. Prakash

x

இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் எனவும், அவர்களை காப்பது நமது கடமை எனவும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "என் Game என்னை விட்டு போகாது, Come back கொடுப்பேன்" என்கிற நம்பிக்கை வார்த்தைகளை சொன்ன, தங்கை ப்ரியாவின் திடீர் உயிரிழப்பால், இதயம் நொறுங்கிப்போனதாக ட்விட் செய்துள்ளார். மேலும், இளம் வீரர்களை காப்பது நமது கடமை எனவும் பதிவிட்டுள்ளார். இதேப்போல இதுக்குறித்து பதிவிட்டுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால், அலட்சியமான மருத்துவர்களுக்கும் அவர்களின் மாஃபியாவிற்கும் அவமானம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்