திடீர் ஆய்வில் சிக்கிய தரமற்ற உணவுகள் "இந்த கடைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்" - அதிகாரிகள் எச்சரிக்கை

x

திடீர் ஆய்வில் சிக்கிய தரமற்ற உணவுகள் "இந்த கடைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்" - அதிகாரிகள் எச்சரிக்கை


காஞ்சிபுரம் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த 3 அசைவ உணவகங்கள் மற்றும் 6 இனிப்பகங்களின் வணிக உரிம சான்றிதழ் புதுப்பிக்கப்படாமல் இருப்பதும், தரமற்ற உணவு பொருட்களை வழங்கியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அக்கடைகளுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் தரப்பில் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், அருகிலுள்ள 7கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டதாக கூறி அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்