எங்கு பார்த்தாலும் வெள்ளம்..தண்ணீரில் மூழ்கிய வீடுகள்.. தத்தளிக்கும் குஜராத் மக்கள்

x

ஜராத் மாநிலம் வடோதராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது... வீதிகள், வீடுகளை மழை நீர் ஆக்கிரமித்துள்ள நிலையில் வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வீடுகள், பள்ளிகள், சந்தைகள் என அனைத்து இடங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்