காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை


காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஒன்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகா மற்றும் கேரள அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த மேட்டூர் அணையை நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கும் வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்