வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் - தவிக்கும் கிராம மக்கள்

x

ஒரே ஆண்டில் ஐந்தாவது முறையாக வெள்ளத்தில் மூழ்கிய பாலாற்றுத் தரைப்பாலம்.

மாண்டஸ் புயலின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மட்டுமின்றி தமிழக ஆந்திர எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது.,

இதன் காரணமாக ஆம்பூர் அருகே உள்ள பாலாறு மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பச்சைகுப்பம் பகுதியில் இருந்து குடியாத்தம் மற்றும் அழிஞ்சிகுப்பம்,மேல்பட்டி,கீழ் பட்டி, வளத்தூர், செம்பேடு, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய தரைபாலமானது முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியதால் தரைப் பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,

மேலும் வருவாய்த்துறையினர் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுதபட்டு உள்ளது.

காவல்துறையினரின் எச்சரிக்கையயம் மீறி தடுப்புகளை கடந்து பாலத்தின் மீது செல்லும் வெள்ள நீரில் அபாயத்தை உணராமல் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பச்சை குப்பம் பாலாற்று தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.,

ஒவ்வொரு முறையும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கும் போதும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் தவறி விழுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஸ்மாபவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதும் வாகன ஓட்டிகள் அச்சமின்றி இருசக்கர வாகனங்களிலும் நடந்தும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்