எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணி - ஆறாக மாறிய ரோடு | Rainfall

x

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் இருந்து வரும் நீரும் பெரியகுளம் வராக நதியில் கலந்து செல்வதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்