நான் கொஞ்சம் Rugged-ஆன ஆளு - பிளிறிய குட்டி யானை..பீதியான வனத்துறை - குன்னூரில் பரபரப்பு

x

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தாயுடன் உலா வந்த குட்டி யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவற்றை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த தாய் யானை வனத்திற்குள் சென்றது.

ஆனால், குட்டி யானை மட்டும் காட்டுக்குள் செல்லாமல் சாலையில் தொடர்ந்து உலாவி வந்தது. அதனையும் விரட்ட முயன்றதால் ஆக்ரோஷமான குட்டி யானை பயங்கரமாக பிளிறியது.ஒரு கட்டத்தில் தனது தாயை சத்தமிட்டு அழைப்பது போல மீண்டும் குட்டி யானை பிளிறிய போது காடே அதிரும் அளவிற்கு சத்தம் காதை பிளந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் வனத்துறையினரும் அச்சமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்