கொடியால் வந்த பிரச்சினை - போலீசாருக்கும் பத்திரிகையாளருக்கும் கடும் வாக்குவாதம் | Qatar

x

பிரேசில் நாட்டின் பிராந்திய கொடியை LGBTQ ஆதரவு கொடி என தவறாக எண்ணிய கத்தார் போலீசார், அங்கு கால்பந்து உலக கோப்பை போட்டிக்கு வந்த பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விக்டர் பெரேரா என்ற பத்திரிகையாளர் வைத்திருந்த கொடியில் வானவில் இருந்ததால், அங்கிருந்த அதிகாரிகள், அவரின் கொடியை கைப்பற்றி கீழே எறிந்துள்ளனர். இதை அந்த பத்திரிகையாளர் வீடியோ எடுக்க முயன்ற போது இருத்தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். கத்தாரில் தன்பாலின ஈர்ப்பு சட்டப்படி குற்றமாக கருதப்படும் நிலையில், தான் வைத்திருந்தது வானவில், நட்சத்திரம் மற்றும் சிகப்பு சிலுவை அடங்கிய பிரேசில் பிராந்திய கொடி என்றும், அது LGBTQ ஆதரவு கொடி இல்லை எனவும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்