சென்னையில் மீனவர்கள் போராட்டம் - நேரில் சென்று திருமாவளவன் ஆறுதல்..!

நொச்சிக்குப்பம் மீனவர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசே மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நொச்சிக்குப்பம் பகுதியில் கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம் காலமாக இங்கு வாழ்ந்து வரும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்வது இயற்கை நீதிக்கு புறம்பானது என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com