நடுக்கடலில் மீனவர் மீது துப்பாக்கி சூடு - விமானப்படை முகாமிற்கு பலத்த பாதுகாப்பு

x

நடுக்கடலில் மீனவர் மீது துப்பாக்கி சூடு - விமானப்படை முகாமிற்கு பலத்த பாதுகாப்பு

ராமநாதபுரம், உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர், காயமடைந்தார், அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்